பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில், இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்த தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றது. 243 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு, 55 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலவரப்படி ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கின்றது. ஆர்ஜேடி கூட்டணி 102 இடங்களிலும், பாஜக கூட்டணி 124 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகின்றது. தேஜஸ்வியின் மகா கூட்டணி தற்போது திடீர் பின்னடைவை சந்தித்துள்ளது.