Published on 31/10/2020 | Edited on 31/10/2020
இந்தியாவில் சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட மாநில அரசுகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் செயல்படும் பொது விவகாரங்கள் மையம் எனும் அமைப்பு, இந்தியாவில் செயல்படும் மாநில அரசுகளை அதன் நிர்வாகத் திறன்களைக் கொண்டு வரிசைப்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத்தின் தரம், வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியலில் தரவரிசை கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, கேரளா (1.388 புள்ளிகள்), தமிழகம் (0.912), ஆந்திரா (0.531), கர்நாடகா (0.468) ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் -1.461 புள்ளிகளுடன் உத்தரப்பிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. மேலும், சிறிய மாநிலங்களுக்கான பிரிவில் கோவா முதலிடத்தையும், மேகாலயா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.