கலவரத்தை அடக்க காவல்துறையை அழைக்க மறுத்த பனாரஸ் பல்கலைக்கழக நிர்வாகம்!
பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலவரத்தை அடக்குவதற்காக காவல்துறையை அழைக்க பனாரஸ் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.
இன்று காலை சமாஜ்வாதி கட்சியின் மாணவர் தலைவர் அசுதோஸ் சிங் என்பவரின் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து, பனாரஸ் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கலவரம் உருவானது. பள்ளிப்பேருந்து தீவைக்கப்பட்டது. பல்கலை. வளாகத்திற்குள் இருந்த கடைகள் சூறையாடப்பட்டன. சிசிடிவி கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர பனாரஸ் பல்கலைக் கழக நிர்வாக தனியார் காவலர்களைப் பயன்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாணவிகள் நடத்திய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர காவல்துறையினர் தடியடி நடத்தினர். இது நாடு முழுவதும் மிகப்பெரிய செய்தியாக உருவானது.
இந்நிலையில், கடந்த முறை காவல்துறையினர் தடியடி நடத்தியதைப் போல, இந்தமுறையும் அப்படியொரு சம்பவம் நடப்பதை நிர்வாகம் விரும்பவில்லை. அதனாலேயே தனியார் செல்யூரிட்டிகளை பயன்படுத்தினோம் என பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.