Published on 26/12/2018 | Edited on 26/12/2018

ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ள பாரத் ஸ்வாபிமான் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று மதுரை வந்திருந்தார். அப்போது அவர் அங்கிருந்த நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நாட்டில் அரசியல் சூழல், அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் ”நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழல் மிகவும் குழப்பமாகவும், கணிக்க முடியாமல் கடினமாகவும் இருக்கிறது. அடுத்த என்ன நடக்கும், தேர்தலில் யார் வெல்வார்கள் என்று இப்போது கூறமுடியாது. மேலும் வரும் தேர்தலில் நான் யாரையும், எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரச்சாரமும் செய்யப்போவதில்லை” என தெரிவித்தார்.