Published on 02/05/2018 | Edited on 02/05/2018
இந்தியாவில் சமீபகாலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. ஏ.டி.எம்களில் திருடச்செல்பவர்கள் முன்பெல்லாம் அதில் பாதுகாப்பில் உள்ளவர்களை கொன்றுவிட்டு பணத்தை எடுத்துச்செல்வர், இல்லையேல் அடித்து பணத்தை எடுத்து செல்வர், ஒரு சிலர் ஏ.டிஎம்மை உடைத்து பணத்தை எடுத்து செல்வர் இன்னும் சிலர் அந்த மெஷினையே கூட எடுத்துச்செல்ல முயற்சிப்பர்.
ஆனால் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள 'பேங்க் ஆஃப் பரோடா' வங்கியின் ஏ.டி.எம்மில் பணத்தை திருட முயற்சி செய்தவர்கள் அதிலிருந்து பணத்தை எடுக்க முயன்றவர்கள் அதனை திறக்க வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர். குண்டு வெடித்ததில் 14 லட்சம் மதிப்பிலான பணம் எரிந்து சாம்பலாகியது. போலீசார் சி.சி.டிவி மூலம் திருடர்களை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.