வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருந்த நிலையில் கடந்த தேர்தல் முதல் சரிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த 17- வது மக்களவை தேர்தலுடன், நான்கு மாநில சட்ட மன்ற தேர்தல்களும் நடைபெற்றது. இதில் ஆந்திர மாநிலத்தில் மொத்தம் உள்ள 170 சட்டமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்.கட்சி 151 இடங்களை கைப்பற்றி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.அதனைத் ஹதொடர்ந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விரைவில் ஆந்திரா மாநில முதல்வராக பதவி ஏற்கிறார். அதே போல் ஒடிஷா மாநிலத்தில் மொத்தம் உள்ள 146 சட்டமன்ற தொகுதிகளில் பிஜு ஜனதா தள கட்சி 112 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக பதவி ஏற்கிறார் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக்.
அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக தனித்து 38 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக அம்மாநில முதல்வர் பெமா கந்தூ பதவி ஏற்கிறார்.இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 2 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் அம்மாநிலத்தின் முக்கிய கட்சியான சிக்கிம் மோர்ச்சா கட்சி 17 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.