Published on 12/01/2019 | Edited on 12/01/2019

கடந்த ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்கள் மீது ஒரு வரி கூட விதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அருண் ஜெட்லி, 'இந்தியாவின் நடுத்தர வர்க்கத்திற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வரி கூட அதிகரிக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி யால் மறைமுக வரிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி இந்தியாவில் மிக முக்கியமான 'நுகர்வோர் நட்பு நடவடிக்கை' ஆகும். பெரும்பாலான பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் முதன்முறையாக ஒரு அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியில், நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் வரும் வருமானத்தில் ரூ .2 லட்சம் கோடி நடுத்தர வர்க்க வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்படுகிறது' என பதிவிட்டுள்ளார்.