உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் நவம்பர் 10ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகச் சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
இவர் சுமார் 6 மாத காலத்திற்கு இந்த பதவி வகிப்பார் என்றும் கூறப்படுகிறது. இவருக்குக் குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் ஏற்கனவே சஞ்சீவ் கண்ணா பெயரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்குக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.