Skip to main content

எந்நேரமும் மாட்டிறைச்சியை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேறாது!

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
எந்நேரமும் மாட்டிறைச்சியை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேறாது! 



கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், யார்,என்ன இறைச்சியை சாப்பிடுகிறார்கள் என்பதையே பார்த்துக் கொண்டிருந்தால், நாடு முன்னேறாது என்று, தமிழகத்தைச் சேர்ந்தவரும், ‘நோபல் பரிசு’ பெற்ற விஞ்ஞானியுமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தஞ்சாவூரில் பிறந்தவர். 65 வயதான இவர், தற்போது லண்டனில் உள்ள புகழ்பெற்ற அறிவியல் ஆய்வுமையமான ‘தி ராயல் சொசைட்டி’யில் பணிபுரிந்து வருகிறார். இவர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில்தான் மேற்கண்ட கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்திய அரசு யார் என்ன இறைச்சி சாப்பிடுகிறார் என்பதுபற்றி கவலைப் பட்டுக்கொண்டிருப்பதை விட்டு, கல்விக்கும் தொழில்நுட்பத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்தால்மட்டுமே சீனாவை முந்தும் கனவுபலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை தேடிக் கொண்டிருப்பவர்கள், நாட்டுப்பற்றுடன் நல்லது செய்வதாகக் கூறிக்கொண்டு உண்மையில்மத விரோதப் போக்கை தொடர்கிறார்கள்; இதனால் நாட்டில் மோசமான விளைவுகளே அரங்கேறுகின்றன என்று கூறியுள்ள வெங்கட்ராமன், நவீனமயமாக்கல் மற்றும்தொழில்துறையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா பின்தங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் போட்டியாக கருதப்படும் சீனா ரோபோக்கள் தயாரிக்கவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கவும் பெருமளவு முதலீடுகளைச் செய்கிறார்கள்; இது எதிர்காலத்தில் அவர்களுக்கும் பெருதவியாக அமையப் போகிறது; இதுபற்றியெல்லாம் இந்தியா யோசிக்கவில்லை என்றால் போகிற போக்கிலஇந்தியா பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்றும் வெங்கட்ராமன் எச்சரித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்