Skip to main content

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Announcement for the election of Congress president!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 

 

அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் செப்டம்பர் 24- ஆம் தேதி முதல் செப்டம்பர் 30- ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் அக்டோபர் 8- ஆம் தேதி கடைசி நாளாகும்; அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் அக்டோபர் 17- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு தலைவர் அறிவித்துள்ளார். 

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், போட்டியின்றி ஒருமனதாக தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்