Published on 05/07/2019 | Edited on 05/07/2019
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் கதறல் சத்தம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொள்ளாச்சியில் பெண்களை குறி வைத்து நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.இதே போல் ஒரு சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விசாகபட்டினத்தில் உள்ள சத்யா நகரில் வசிக்கும் சந்தீப் என்ற இளைஞர் மீது, அவரால் பாதிக்கபட்ட ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்தனர். சந்தீப் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பணக்கார பெண்களைத் தேடி அவர்களிடம் அறிமுகமாகி, பின்னர் நெருக்கமாக பழகி அதன் மூலம் அவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளார்.
இதில் புகார் கூறப்பட்ட பெண்ணை தொடர்புகொண்டு நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் உங்களது ஆபாசம் புகைப்படம் வந்துள்ளது, அதை அழிக்க வேண்டுமென்றால் எனக்கு 50ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த பெண்ணும் அந்த நபரை நம்பி பணம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வாலிபரின் மீது சந்தேகம் வரவே பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார். அதன் பின்னர் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படத்தை வெளியில் அந்த நபர் பகிர்ந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் புகாரை அடுத்து அந்த இளைஞரை விசாரித்த போது பல அதிர்ச்சியான விஷயங்கள் வெளிவந்தன. அந்த இளைஞர் இது போல் 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்தும் , ஏமாற்றியும் வந்துள்ளார் என்பது தெரியவந்தது.