இந்தியாவில் கரோனா தொற்று மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் நேற்று (10.05.2021) இரவு 8 மணி அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலரது உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
தமிழக்தில் இருந்து வர வேண்டிய ஆக்சிஜன் உரிய நேரத்தில் வந்து சேராததால், இந்த உயிரழப்பு ஏற்பட்டதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ள அவர், மாவட்ட ஆட்சியர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றும், அதிகாரிகள் அதிக கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.