Published on 12/11/2018 | Edited on 12/11/2018

மத்திய அமைச்சர் அனந்தகுமார்(வயது59) புற்றுநோயின் காரணமாக இன்று அதிகாலையில் பெங்களூருவில் காலமானார்.
அனந்தகுமாரின் மறைவால் கர்நாடக மாநில பாஜகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் வர உள்ளதால் பெங்களூரிவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.