கொல்கத்தாவில் இன்று பாஜக தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கூட்டங்களில் கலந்துகொள்ள இருக்கிறார்.
ஏற்கனவே அஸ்ஸாமில் தேசியகுடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது. அந்த பட்டியல் வெளியீடு வங்கம் பேசுவோருக்கு எதிரானது. அதிகப்படியானோர் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்ற குற்றசாட்டை பாஜக மீது வைத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்த விவகாரத்தில் ரத்த ஆறு ஓடும் வகையில் பாஜக செயல்படுகிறது என பிரச்சாரம் செய்துவருகிறார்.
பாஜகவை பொறுத்தவரை மேற்கு வாங்காளத்தில் பாஜகவின் பலத்தை கட்டமைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல போராட்டங்கள் மற்றும் பேரணிகளை பாஜகவும் நடத்தி வருகிறது. இந்நிலையிதான் இன்று கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் பாஜக கூட்டங்கள் மற்றும் சுற்றுப்பயணங்களில் பங்கேற்க அமித்ஷா வருகைதர இருக்கிறார்.
இந்நிலையில் அங்கு அமிதாஷாவை வரவேற்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வரவேற்பு பேனர்களுக்கு இடையிடையே ''கோ பேக் அமித்ஷா'' மற்றும் ''ஆன்ட்டி பெங்கால் பிஜேபி கோ பேக்'' போன்ற பேனர்கள் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றநிலை நீடித்து வருகிறது. அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.