Published on 12/03/2020 | Edited on 12/03/2020
பெருநகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை போராட்ட நெருப்பு இன்னும் அணையாமல் இருக்கிறது என்றால் அது மத்திய பாஜக மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் எதிராக நடக்கும் போராட்டம் தான்.

இவ்வாறு போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா "என்பிஆர் கணக்கெடுப்பில் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை. என்பிஆர் செயல்முறையை எண்ணி யாரும் பயப்பட வேண்டியதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் பிரச்சினையில் தவறான பிரச்சாரம் பரப்பப்படுவதாக எனது முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் எடுத்துக்கொள்வதல்ல, குடியுரிமையை வழங்குவதாகும்" என்று தெரிவித்துள்ளார்.