Published on 27/12/2019 | Edited on 27/12/2019
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை எதிர்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து எதிர்த்து வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சிம்லாவிற்கு சென்றுள்ளார். அங்கு பொது மேடையில் பேசுகையில், “ காங்கிரஸ் மற்றும் சில கம்பெனிகள் இந்த சட்டம் சிறுபாண்மையினர்களான இசுலாமியர்களுக்கு ஆபத்தானது என்று பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றன. நான் ராகுல் பாபாவிடம் சவால் விடுகிறேன், இந்த சட்ட திருத்தத்தில் ஒரு அம்சமாவது சிறுபாண்மையர்களின் குடியுரிமைக்கு ஆபத்தாக இருக்கிறது என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா” என்று கூறியுள்ளார்.