Published on 12/10/2021 | Edited on 12/10/2021

இந்தியப் பிரதமர் மோடியின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அமித் கரே நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டின் பீகார் - ஜார்கண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் செயலாளராக இருந்தபோது, டிஜிட்டல் மீடியா விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர்.
பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில், கல்வி அமைச்சகத்தில் உயர்கல்வித்துறை செயலாளராகபொறுப்பேற்ற இவர், தேசிய கல்விக் கொள்கை 2020-இன் உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றினார். அமித் கரே இம்மாத தொடக்கத்தில்தான் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.