ஜம்மு காஷ்மீரில், 4 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 8ஆந்தேதியில் இருந்து நடைபெற உள்ளது. தற்போது காஷ்மீரில் 35ஏ அரசியலமைப்பு பிரிவை வைத்து பல பிரச்சனங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்காத நிலையில் இத்தேர்தலை புறக்கணிப்பது என தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை முடிவு செய்தது.
இந்த சட்ட பிரிவிற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உள்ளாட்சித தேர்தலுக்கு பின் வழக்கை விசாரிக்கும்படி மத்திய அரசு நீதிமன்றத்திடம் கேட்டு கொண்டுள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ”உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிட வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன். இது மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள ஒரு நேரடி வாய்ப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.