கர்நாடகாவின் மிகப் பிரபலமான மடாதிபதியான சிவமூர்த்தி முருகா சரணுரு என்பவர் மாணவிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஏழு நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ளது முருக மடம். இம்மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணுரு. இவர் மடத்திற்கு உரிமையான பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயது மாணவிகள் இரண்டு பேரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பான புகார்கள் வெளியான நிலையில் மைசூர் காவல்துறையினர் மடாதிபதி உட்பட ஐந்து பேர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மடாதிபதி தப்பியோடிய நிலையில் பல்வேறு தேடுதல் வேட்டைகளுக்கு பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்து விளக்கமளித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.
மடாதிபதி மீது பாலியல் புகார் கூறிய இரண்டு மாணவிகள் சித்திரதுர்கா முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் மடாதிபதி மீதான புகாரை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அடுத்த ஏழு நாட்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.