இந்தியாவில் தேசிய பாதுகாப்பு வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சேனல் உட்பட எட்டு செய்தி யூ-டியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது.
முடக்கப்பட்டுள்ள யூ-டியூப் சேனல்கள் 114 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றவை. முன்னதாக, கடந்த ஜூலை 22- ஆம் தேதி அன்று இந்தியாவில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூ-டியூப் சேனல்கள், 19 சமூக வலைத்தளக் கணக்குகள், 747 வலைத்தள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம் 69A பிரிவின் கீழ் முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசப் பாதுகாப்பு வெளியுறவுக் கொள்கைகள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதால், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த 6 சேனல்கள் உட்பட 16 யூ-டியூப் சேனல்களும், ஒரு ஃபேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.