ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் முகேஷ் அம்பானி, இன்று நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்திலும் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானி இந்த கூட்டத்தில், 'ரிலையன்ஸ் நெக்ஸ்ட்' ஸ்மார்ட் போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்மார்ட் போன், ஜியோ மற்றும் கூகுளின் அனைத்து செயலிகளையும் உள்ளடக்கியிருக்கும் என தெரிவித்துள்ள முகேஷ் அம்பானி, இந்த ஸ்மார்ட் போன் மிகவும் மலிவாகவும் புதிய தொழிற்நுட்பங்களை கொண்டிருக்கும் என்றதோடு, விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 10 முதல் விற்பனைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் 5 ஜி தொழிற்நுட்பத்தை விரைவாக கொண்டுவர ஜியோ பணியாற்றி வருகிறது என தெரிவித்த முகேஷ் அம்பானி, "5ஜி சூழல் மண்டலத்தை உருவாக்கும் பொருட்டு, உலகளாவிய நண்பர்களுடன் இணைந்து 5ஜி சாதனங்களை உருவாக்கி வருகிறோம். ஜியோ, இந்தியாவை 2ஜி இல்லாத நாடக மாற்றுவதற்கு மட்டுமல்லாமல், 5ஜி கொண்டிருக்கும் நாடாக மாற்ற பணியாற்றி வருகிறது" எனவும் கூறியுள்ளார்.