இந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்டது வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று ஆனால் இறுதி நேரத்தில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பாக அஜய் ராய் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது . இந்த நிலையில் வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட தமிழகத்தை சேர்ந்த 40 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி பேசிய தமிழ்நாடு விவசாயி சங்கத் தலைவர் இந்திய முழுவதும் மோடிக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போட்டியிட உள்ளனர் என்று தெரிவித்தார் . மோடி ஆட்சியில் விவசயிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையும் மற்றும் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ஆபத்து என்ற அடிப்படையிலேயே, அவரை எதிர்த்து விவசாயிகள் போட்டியிடுவதாகவும் தகவல் தெரிவித்தனர்.மோடிக்கு எதிராக தமிழக விவசாய சங்கம் போட்டியிடுவதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் , ஏற்கனவே அய்யாக்கண்ணு போட்டியிடுவதாக சொல்லி பின்பு அமித்ஷாவை சந்தித்த பின்பு போட்டியிடவில்லை என்று கூறியது குறிப்படத்தக்கது