இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக உடனடி ஆயுத கொள்முதலுக்கான சிறப்பு நிதியாக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லைப்பகுதியில் தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வந்தன. இதனையடுத்து ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பலகட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக உடனடி ஆயுத கொள்முதலுக்கான சிறப்பு நிதியாக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் கூடிய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாங்கப்படும் ஆயுதங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆர்டர் செய்து ஒரு வருடத்திற்குள் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.