முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா, தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒமிக்ரான் குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியா, "நாங்கள் தினமும் நிபுணர்களைக் கொண்டு நிலைமையைக் கண்காணித்துவருகிறோம். முதலாவது மற்றும் இரண்டாவது கரோனா அலைகளில் நாம் பெற்ற அனுபவத்தின் மூலம், திரிபுகள் பரவும்போது பிரச்சனைகளைச் சந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, முக்கியமான மருந்துகளின் கூடுதல் இருப்பை உறுதி செய்துள்ளோம்" என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மற்றும் டெல்லியில் 54 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரே ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அவர் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.