தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிட கூடாது என சென்னை ஐகோர்ட் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வசம் உள்ள அனைத்து வீடியோ பதிவுகளையும் ஒப்படைக்க வேண்டும், அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிட கூடாது என மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை மாற்றம் செய்ய முடியாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். வழக்கு விசாரணையின் போது இச்சம்பவம் தொடர்பாக விரிவான பதில் தருவதற்கு அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தரப்பு கோரியது. இதனை ஏற்ற நீதிபதி தமிழக அரசுக்கு பதிலளிக்க அவகாசம் அளித்து வரும் 9-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைத்தார்.