Skip to main content

10 வாக்குச்சாவடிகளுக்கும் மறுதேர்தலா??? -சத்யபிரதா சாஹூ

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

அரியலூர் பொன்பரப்பி உள்ளிட்ட 10 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பதிலளித்துள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 

sathya pratha sahoo



அரியலூர் பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்சனை நடைபெறவில்லை. இரு தரப்பினருக்குமிடையே மட்டுமே பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அங்கு மறுதேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பொதுப்பார்வையாளர் தரும் அறிக்கை பொறுத்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். இன்று மாலை டெல்லிக்கு அறிக்கை அனுப்பப்படும். 
 

மேலும் தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும்படையால் இதுவரை 213.18 கோடி மற்றும் 2,403 கிலோ தங்கம், 3.51 கோடி மதிப்பிலான மதுபானங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்