Skip to main content

காட்டுத்தீயில் சிக்கிய மாணவர்கள் - ஒருவர் பலி!

Published on 11/03/2018 | Edited on 11/03/2018
fire

 

தேனி மாவட்டம் போடி அருகே காட்டுத்தீயில் சிக்கிய மாணவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.  

 

குரங்கணி மலைப்பகுதி அருகே கொழுக்கு மலையில்  திடீரென ஏற்பட்டு வேக வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் மலையேற்றப்பயிற்சிக்கு சென்ற 40 மாணவ, மாணவிகள்  சிக்கினர்.   இவர்களில் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.   மீதம் உள்ள மாணவர்களை மீட்க ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், ஆம்புலன்ஸ் விரைந்துள்ளனர்.  

 

துணை முதல்வரான ஒபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் தான்  மேற்கு தொடர்ச்சி  மலை உள்ளது. இந்த மலையின் மேற்கில் தான்  போடி தொகுதி  வருகிறது.  அதாவது போடியில் இருந்து மூணாறு  செல்லும் போடி மெட்டு வரை மேற்கு  தொடர்ச்சி மலை பரந்து விரிந்து காணப்படும்.


இப்படிபட்ட மேற்கு தொடர்ச்சி மலையில்தான்  விலை உயர்ந்த  பல மரங்கள் மற்றும்  புலி, சிறுத்தை, மான்,  யானை, காட்டு எருமை  இப்படி பல வகையான  விலங்குகள், குரங்குகள், பறவைகள், இருக்கிறது. அதுபோல்  மூலிகைகளும் இப்பகுதியில்  பரந்து விரிந்து கிடக்கிறது.

 

 இந்த நிலையில் தான்  கடந்த 4 நாட்களாக  மூணாறு செல்லும் வழியான போடி மெட்டு பகுதியில்  காட்டு தீ பரவி வனத்தையே அழித்து  வருகிறது.  அதன் மூலம்  வனவிலங்குகள்  மற்றும் பல சாதி மரங்களும் காற்றுதீக்கு இறையாகி வருகிறது.  

 

வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க  எந்த ஒரு  நடவடிக்கையும்  எடுக்காமல் மெத்தன போக்கவே கடைபிடித்து வருகிறார்கள் அதிகாரிகள் .  இதனால் தொடந்து  காட்டு தீ  மேற்கு தொடர்ச்சி மலையில்  எரிந்து  கொண்டு தான் இருக்கிறதே தவிர  அதை கட்டுப்படுத்த  அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கவே கடைபிடித்து வருகிறார்கள். இதனால் தொடந்து நான்காவது நாளாக  காட்டு தீ எரிந்து வனத்தை அழித்து வருகிறது.  இதை துணை முதல்வரான ஒபிஎஸ்சும் கண்டு கொள்ளவில்லை  என்பதுதான் வேதனை.

சார்ந்த செய்திகள்