Skip to main content

ஃப்ரீ ஃபையர்  ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும்! -தமிமுன் அன்சாரி

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
ddd

 

 

நெல்லை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத்தை வண்ணாரப்பேட்டை பகுதியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

 

மாவட்ட செயலளார் நிஜாம், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் காயல் சாகுல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ மேற்படிப்பில் மத்திய அரசின் ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட கல்லூரிகளில் நுழைவுத் தேர்வுகளை தனியாக நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது. 

 

அனைத்து மருத்துவ படிப்புக்கும் நீட் தேர்வுதான்  எனக் கூறிய மத்திய அரசு இப்போது இவ்வாறு கூறியிருப்பது விநோதமாக இருக்கிறது. எனவே தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு விதிவிலக்கை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும்.

 

கேந்திரிய வித்யாலயாவில் தமிழுக்கு உரிய அந்தஸ்தை வழங்கி செம்மொழிக்கு உரிய மரியாதையை மத்திய அரசு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை உச்சநீதிமன்ற கருத்தின் அடிப்படையில் உடனே விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நீக்கம் செய்யப்பட்ட அருந்ததிராயின் புத்தகத்தில் உள்ள பகுதிகளை மீண்டும் இணைக்க வேண்டும் என கல்வி  சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், அதை பல்கலைக்கழகம் ஏற்க வேண்டும்.

 

சிறுவர் சிறுமிகளை சீரழிக்கும் ஃப்ரீ ஃபையர்  என்ற ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையை வீணாக்காமல் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கு பயன் படுத்தும்  வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்