அண்ணா பல்கலைகழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இறுதிவரை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.கழக இளைஞரணி மற்றும் மாணவரணி இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று தி.மு.க போராட்டம் நடத்துகிறது. சூரப்பா நியமிக்கப்பட்டால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழியும் என்பதை உணர்ந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2018-லேயே போராட்டம் நடத்திய கட்சி பா.ம.க.
அப்போது அதை வேடிக்கை பார்த்த திமுக, அண்ணா பல்கலைக்கழக சீரழிவுகள் தொடங்கிவிட்ட நிலையில் இப்போது தான் போராட்டம் நடத்துகிறது. அண்ணா பல்கலைக்கழக நலனில் இப்போதாவது திமுகவுக்கு அக்கறை வந்ததே... அது வரை சரி தான்!'' என ட்வீட் செய்துள்ளார்.