மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவியோடு குற்றஞ்சாட்டபட்ட உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பச்சாமி ஆகியோர் கைது செய்யபட்டு 8 மாதங்கள் ஆனபின்பும் இன்றுவரை ஜாமீன் கொடுக்காத நிலையில் முருகனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் நமக்கு போன் செய்து, ”நாங்க குடும்பத்தோட சாகப்போறோம் எங்களால் இந்த அதிகார வர்கத்தோடு மோத முடியவில்லை. அரசும் கவர்னரும் நல்லாவே இருக்கமாட்டார்கள். எங்களது சாபம் அவர்களை சும்மா விடாது”என்று போனை வைக்க நாம் அங்கு விரைந்தோம்.
அங்கு மிகுந்த விரக்தியில் இருந்த முருகனின் மனைவி சுஜாவோ, ”அவரை நம்பிதான் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களும் இருக்கிறோம். இப்ப அவருக்கே இந்த நிலைமை. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியே தலைகாட்ட முடியவில்லை . இப்போது நடப்பது எல்லாமே பொய்யா இருக்கு. அரசு மற்றும் நீதியும் நியாயத்தின் பக்கம் இல்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
சின்ன பிள்ளைக்கு கூட புரியும். நிர்மலாதேவி என் கணவர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பச்சாமிக்குமா மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்திருப்பார்? பல்கலைகழகத்தின் கடைநிலை ஊழியர்களான இவர்களை திருப்திபடுத்தியா பணமும் புகழும் அடையமுடியும். அந்த மாணவிகளிடம் தனக்கும் கவர்னர் தாத்தாவுக்கும் உள்ள நெருக்கத்தையும் பல்கலைகழகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களை பற்றியுமே பேசியுள்ள போது எதற்காக என் கணவரை மட்டும் கைது செய்து ஒரு பொய்யான வாக்குமூலத்தை போலிஸே எழுதி அதை பத்திரிக்கைகளுக்கு கொடுக்கவேண்டும். கவர்னர் அவசர அவரமாக சந்தானம் கமிஷன் அமைக்க வேண்டும், நக்கீரன் ஆசிரியரையே கைது பண்ண அரசு தயாராவதும் நிர்மலாவே இது என் வாக்குமூலம் இல்லை என்று சொல்கிறார்.
என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இப்படியே இருவரை மட்டும் குற்றவாளியாக்கி சிறைக்குள் வைக்க திட்டம்போடுகிறார்கள். வெளியே விட்டால் பல உண்மைகளை நிர்மலாதேவி போட்டுடைத்துவிடுவார் என்று அவரிடம் யாரையுமே நெருங்க விடுவதில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஒரே மர்மமாக இருக்கிறது என்று தேம்பி தேம்பி அழத்தொடங்க....
அருகில் இருந்த அவரது தந்தை ”ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரைக்கு வருகிறார். நாங்கள் காங்கிரஸ் குடும்பம். அவரிடம் நியாயத்தை கேட்கவும் உண்மையில் என்னதான் நடந்தது. ஏன் என் மருமகனை மட்டும் குறிவைக்கிறார்கள். எங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லையா என்ற கோபத்தில்தான் என் மகள் குடும்பத்தோடு சாகபோறோம் என்றாள். நான்தான் அனைவரையும் சமாதானபடுத்தி உங்களை அழைத்தேன் என்று அவரிடமும் பேசிவிட்டோம். அவர் வரசொன்னார் . அதுதான் மதுரை ஏர்போர்ட்டுக்கு போறோம் என்று சொல்ல, நாமும் கிளம்பினோம் என்னதான் நடக்கிறது பார்க்க.....
அங்கு இவர்களுக்காகவே காத்திருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ”வாங்கம்மா நான் எல்லாத்தையுமே கேள்விபட்டேன். எனக்கும் உங்க ஆதங்கம் புரிகிறது. யாருக்காக நிர்மலாதேவி மாணவிகளுக்கு வலைவீசினாள் என்று அப்பட்டமாகவே தெரிகிறது. அந்த ஆடியோவிலேயே சொல்கிறார் ”கவர்னர் தாத்தா எவ்வளவு நெருக்கம் பார்த்தீங்களா என்று அதுபோதாதா?
இந்த விசயத்தில் கவர்னருக்கு ஏன் இவ்வளவு பதட்டம்” ஆடியோ ரிலீஸான அதே நாள் அவசர அவசரமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த காரணம் என்ன. ”எங்கப்பன் புதருக்குள்ள இல்ல என்பது போல கவர்னர் இந்த விசயத்தில் அக்கரை எடுப்பதற்கான காரணம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது”
இதை கட்டாயம் பொதுதளத்தில் கேள்விகள் வைப்பேன் மற்றும் கட்சியில் கலந்து ஆலோசிட்டு உங்களுக்கு உதவ முன்னிற்பேன். கவலைபடாமல் போங்க என்று ஆறுதல் சொல்ல.. அங்கிருந்து வெளியே வந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசனை சந்தித்தனர்.
முத்தரசன் அவர்களிடம், ‘’இதனால் எந்தவித தப்பான முடிவும் எடுத்துவிடாதீர்கள் தற்கொலை இதற்கு தீர்வாகாது. உண்மையை முழுவதும் மறைக்கமுடியாது யாருக்காக இவ்வளவு வேலையும் நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் மேகதாது பிரச்சனையில் கூட ஏன் ஜாமின் கொடுக்க இவ்வளவு தாமதபடுத்துகிறார்கள் என்று பேசியிருக்கிறேன்.,”தமிழக அரசு நியாயமான விசாரனையை நடத்தாது. அதிகாரம் மத்தியில் இருக்கிறது. தமிழக அரசு ஒன்றும் செய்யாது. இதில் கவர்னரும் அவரின் உதவியாளர் ராஜகோபாலும் சம்மந்தபட்டிருக்கிறார்கள்.
இதை ஆணிதரமாக சொல்வேன். பயபடாமல் போங்க கம்யூனிஸ்ட் கட்சி நியாயத்தின் பக்கம் கட்டாயம் நிற்கும். நக்கீரன் இதை தொடர்ந்து செய்திவெளியிடுவதால்தான் எங்கே நம்ம குட்டு வெளியே தெரிந்துவிடுமே என்ற கோபத்தில்தான் நேரடியாக கவர்னரின் அதிகார அழுத்தத்தால்தான். எல்லோரும் சட்டம்124ன் படி கைது பண்ணமுடியாது என்று உயர் அதிகாரிகள் எவ்வளவோ சொல்லியும் அவரை கைது செய்து அசிங்கபட்டார் கவர்னர். சீக்கிரம் நிர்மலாதேவி விசயத்தில் பெரியமனிதர்களின் முகம் வெளியே வரும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’’ என்று ஆறுதல் கூறினார்.