Skip to main content

'நீட் தேர்வுக்கு தடையில்லை' -7 மாநிலங்களின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

neet exam supreme court judgement

 

 

கரோனா காலம் என்பதால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரியும், ரத்து செய்யக்கோரியும் மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட ஆறு மாநில அமைச்சர்கள், புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் உள்பட 7 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தது. 

 

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மனுக்களை விசாரிக்க முகாந்திரம் இல்லை எனக்கூறி சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.

 

சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் செப்டம்பர் 13- ஆம் தேதி திட்டமிட்டப்படி நீட் தேர்வு நடக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்