Skip to main content

ஆகஸ்ட் 1-ல் நீட்! - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

neet exam date announced national testing agency

 

தேசிய தேர்வு முகமை (National Testing Agency- NTA) இன்று (12/03/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு (NEET- National Eligibility Cum Entrance Test) வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதி நடைபெறுகிறது. ஆங்கிலம், ஹிந்தி உள்பட 11 மொழிகளில் ஒரே கட்டமாக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தி, பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி (Life Sciences) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளின் சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை மாணவர்கள் https://ntaneet.nic.in, https://nta.ac.in, ஆகிய இணையதளப் பக்கங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

neet exam date announced national testing agency

முன்னதாக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 


 

 

சார்ந்த செய்திகள்