Skip to main content

5ம் தேதி திருமணம், ஆனால் இருப்பது சிறையில்!!! மது ஒழிப்பு போராளியின் நிலை...

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

மதுஒழிப்பை முன்னெடுத்து தொடர்ந்து போராடி வருபவர் வழக்கறிஞர் நந்தினி. பல மதுஒழிப்பு போராட்டங்களை நடத்தி சிறை சென்றார்.
 

nandhini


கடந்த 2014ம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், நந்தினி மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. 

அப்போது நந்தினி, ஐ.பி.சி. 328ன்படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் வாதாடினார். இதனால் அவர்மீதும், அவரது தந்தைமீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவருக்கு ஜூலை 5ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதும், ஜூலை 9ம் தேதி வரை அவர்களை சிறையிலடைக்க திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் உட்பட அனைவரும் அதிர்ச்சியிலுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்