கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் மழை பெய்துள்ளது. இதனால் கேரள மாநிலத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஹெலிகாப்டர், படகுகள் மூலம் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழையில் மூழ்கியதால் வீடுகளை இழந்து தவிப்போர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து நிவாரண உதவிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய அதி தீவிர இயற்கை பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.