Skip to main content

நிலக்கரி தட்டுப்பாடு: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி திடீர் நிறுத்தம்!

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
mettur power plant

 

 

நிலக்கரி தட்டுப்பாட்டால், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. 


சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இரண்டு டிவிஷன்கள் உள்ளன. முதல் டிவிஷனில் நான்கு யூனிட்டுகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.  இரண்டாவது டிவிஷனில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு யூனிட் செயல்பட்டு வருகிறது. 


மேற்சொன்ன ஐந்து யூனிட்டுகள் மூலம் தினமும் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். முதல் டிவிஷனின் மூன்றாவது யூனிட்டில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறி, நேற்று முன்தினம் முதல் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டது. மூன்று நாள்களில் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி முடங்கியுள்ளது.


இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால் இரண்டாவது யூனிட்டில் மின் உற்பத்தி நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 


ஏற்கனவே காற்றாலை மின்சார உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அனல்மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் மின்வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்