ஸ்டெர்லைட் மூடப்படம் என அரசாணை வெளியிட்டால் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என தமிழக அரசுக்கு மீனவ சங்கத்தினர் நிபந்தனை விதித்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 13 பேரில் 7 பேருக்கு மட்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் மீனவ சங்கத்தினர் ஆலோசனை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பங்குதந்தை நார்த்தடே,
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படம் என அரசாணை வெளியிட்டால் தான் உயிரிழந்தவர்களின் உடல்களை பெறுவோம். எங்களின் இந்த கோரிக்கையை ஏற்றால் உயிர்த்தியாகம் செய்ததாக கருதி உடல்களகைப் பெற்றுக்கொள்வோம் என தமிழக அரசுக்கு மீனவ சங்கதினர் தமிழக அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவித்தார்.