Skip to main content

’நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ - ஸ்டாலின் எச்சரிக்கை 

Published on 09/10/2018 | Edited on 10/10/2018
si

 

நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் இந்த ஆட்சி பின் விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும் என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.


நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் இன்று காலையில்  கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட அவர் சென்னை
சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தார்.  பல மணி நேர விசாரணைக்கு பின்னர் அவரை மருத்துவம பரிசோதனைக்காக திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

 

si2

  

சிந்தாரிப்பேட்டை காவல் துணை ஆனையர் அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அவரை பார்க்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.    இந்த நிலையில் நக்கீரன் ஆசிரியரை சந்திக்க மு.க.ஸ்டாலின் வரும் தகவல் வந்தது.   அதற்குள் நக்கீரன் ஆசிரியரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டதால் மருத்துவமனைக்கு சென்றார் ஸ்டாலின். அவருடன் துரைமுருகன்,  ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் வந்தனர்.  திமுகவினரும் திரண்டு வந்ததால் பரபரப்பு நிலவியது.  

 

si3


நக்கீரன் ஆசிரியரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின்,

’’ இந்த கைது விவகாரம் நாம் சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. பாஜகவின் தலைவர்களின் ஒருவராக இருக்கக்கூடிய எச்.ராஜா மீது ஏன் சட்டம் பாயவில்லை. அறநிலையத்துறையில் பணியாற்றியவர்களை எல்லாம் மிக கேவலமான முறையில் பேசிய எச்.ராஜா, தந்தை பெரியார் சிலையை முழுவதுமாக உடைக்க வேண்டும் என்று பகிரங்கமாக பேசிய எச்.ராஜா   கைது செய்யப்படவில்லை.  அதுமட்டுமல்ல,  அதே பாஜகவில் இருக்கின்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர்  வெளிப்படையாகவே பத்திரிகை துறையில் இருக்கும் பெண்களை எல்லாம் கொச்சைப்படுத்தி பேசிய  பேச்சை மக்கள் மறந்துவிடவில்லை.  அவரும் கைது செய்யப்படவில்லை.    நீதிமன்றம் அவரை கைது செய்ய சொன்ன பின்னரும் போலீஸ் காவலுடன் அவர் வலம் வந்துகொண்டிருந்தார்.   பாஜகவுக்கு ஒரு நீதி.  அக்கட்சியை எதிர்ப்பவர்களுக்கு ஒரு நீதியா? இதை நான் திமுகவின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

 

md

 

உடனடியாக நக்கீரன் கோபால் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்துவிட்டு அவரை விடுதலை செய்ய வேண்டும்.  ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம்.  ஆளுநர் நேரம்  சந்திக்க நேரம் ஒதுக்கினால் நக்கீரன் கோபால் விவகாரம் குறித்தும் பேசுவோம்.   நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் இந்த ஆட்சி பின் விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும்’’

என்று எச்சரித்தார்.

 

md


 

சார்ந்த செய்திகள்