Skip to main content

                    திமுக- 33, அதிமுக -5,அமமுக-2  : பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்து கணிப்பு முடிவுகள்

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

 

மக்களை ஆய்வது மக்களுக்கவே என்ற முழக்கத்துடன் லயோலா கல்லூரி முன்னாள் மாணவா்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடா்பகம் இணைந்து நடத்திய நாடாளுமன்ற சட்டமன்ற இடைத்தோ்தல்  க௫த்து கணிப்பு இன்று வெளியிடப்படடது.   வ௫ம் நாடாளும்மன்ற தோ்தல் சட்டமன்ற இடைத்தோ்தலில் உங்கள் வாக்கு யா௫க்கு என்று கடந்த 17.03.2019 முதல் 03.04.2019 வரை  16 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நான்கு குழுக்களாக பிரிந்து சென்று மக்களை எண்ணஓட்டத்தை அறிந்து உங்கள் வாக்கு யா௫க்கு என்று கள ஆய்வு நடத்தபட்டது.

 

ப்


நடுநிலையாளா்கள், பொதுமக்கள், இளம் வாக்களா்கள், கல்லூரி  மாணவ,மாணவிகள் என்று ஒ௫ நாடாளுமன்றத்தில் குறைந்த பச்சம் 400-500 வரை மக்களை சந்தித்து உங்கள் வாக்குகள் யா௫க்கு என்று நாடாளும் மன்றம், சட்டமன்ற இடைத்தோ்தல் க௫த்து கணிப்பு நடத்தபட்டது. 21,464  பேரிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் 05.04.2019, வெள்ளிக்கிழமை சேப்பாக்கத்தில் வெளியிடப்பட்டது.

 

ப்

 

தமிழகம் மற்றும் புதுச்சேரி 40 மக்களவை தொகுதிகளில் 27 முதல் 33 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.   அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அமமுக கூட்டணி 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெற வய்ப்பு என்றும்  தெரிவிக்கிறது.

 

 18 சட்டபேரவைக்கான இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 இடங்களில் வெற்றி பெரும் என்றும், அதிமுக 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு என்றும்,   அமமுக 3 முதல் 4 தொகுதிகளில்  வெற்றி பெற வாய்ப்பு என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.

 

e13e14eeeeee

 

சார்ந்த செய்திகள்