Skip to main content

மத்திய சுகாதார அமைச்சரை அதிரவைத்த டாக்டர்கள்! 

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

harsh vardhan health minister


தேசிய அளவில் இந்த மாதம் 17 -வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு பற்றியும், அதன் பிறகான நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவத்துறை வல்லுநர்களிடம் அடிக்கடி ஆலோசனைகளை நடத்தி வருகிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். சமீபத்தில் ஐ.சி.எம்.ஆர். அதிகாரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹம்ஷவர்த்தன். 
 

அந்த ஆலோசனையில், ’’கரோனாவின் வீரியம் ஜூனில் அதிகரித்து அதன் பிறகே குறையும்; ஆனாலும், கவலைப்பட தேவையில்லை; தளர்வுகள் குறித்து மேலும் சில துறைகளுக்கு அனுமதிக்கலாம்; ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; மத்திய அரசிடமிருந்து அதற்கான வழிகாட்டுதல்களை கொடுக்கலாம்’’ என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 
 

ஜூனில் அதிகரிக்கும் என்கிற தகவல் அமைச்சர் ஹம்ஷவர்த்தனை அதிர்ச்சியடைய வைத்ததாம். கரோனாவின் தாக்கம் குறித்த எதார்த்த நிலவரம் புரிகிறது. ஆனால், மக்களின் வாழ்வாதார பாதிப்பும் பொருளாதாரச் சரிவும் கடினமாகிறது. இது தொடர்ந்தால், ஊரடங்கை உடைத்து மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினால் அதனை எப்படிச் சமாளிப்பது?  இதனைப் பிரதமரிடம் எப்படி விவரிப்பது? என்கிற கவலைதான் அமைச்சருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு காரணம் என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். 



 

சார்ந்த செய்திகள்