Skip to main content

“பலத்த மழைக்கு வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Chance of heavy rain Meteorological Department warning

 

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அடுத்த 3 மணி நேரத்திற்கு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சிவகங்கை, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, அரியலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்