பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியால் செய்யப்பட்ட பணமோசடியின் தாக்கம் குறைவதற்கு முன்பாகவே, சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் ஜுவல்லரியின் நகைக்கடை அதிபர் ரூ.800 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய வங்கிகளில் பணமோசடி செய்பவர்கள் வரிசையாக வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் நிலையில், ஒரு மோசடி நடப்பதற்கு முன்பாகவே அதைத் தடுக்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசும், ரிசர்வ் வங்கியும் கவனம் செலுத்துவதில்லை.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘இந்த பணமோசடிகள் எல்லாம் ஜூவல்லரித் துறையைச் சேர்ந்தவர்களாலேயே நடக்கிறது. குறிப்பாக அவர்களெல்லாம் குஜராத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் யாரோ உதவுகிறார்கள். அந்த உதவி எப்படி, யாரால் கிடைக்கிறது என்பது பற்றிய தகவல்கள் இல்லை. இதுகுறித்து தொடர்ந்து பொதுமக்கள் அரசை நோக்கி கேள்விகளை எழுப்பவேண்டும். மிகக்கடுமையான கேள்விகளை முன்வைக்கவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.