Published on 08/11/2018 | Edited on 08/11/2018

மதுரை தோப்பூரில் எப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அரசு தெரிவிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசு இதழில் வெளியிட வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக வரும் டிசம்பர் 6ஆம தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதுவரை நடைப்பெற்றுள்ள பணிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.