Published on 01/04/2018 | Edited on 01/04/2018
![thampidurai](http://image.nakkheeran.in/cdn/farfuture/U5Pq9Tq4_7GQV9rm-9cGFzTKKreX72SeYja3KVL6yxg/1533347682/sites/default/files/inline-images/thambithurai.jpg)
ஜல்லிக்கட்டுக்காக எப்படி போராடினார்களோ காவிரி மேலாண்மை வாரியத்திற்காகவும் மக்கள் போராட வேண்டும். ஒரே இயக்கமாக திரண்டு மக்கள் போராட வேண்டும் என சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெற விடமாட்டோம். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக தயாராக உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சியும் அறிக்கை விட்டால் ஆதரவு தர தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.