Skip to main content

சுதீஷை மிரட்டினார்களா? பிரஸ் மீட் பின்னணி! 

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

 

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய தேமுதிக இதோ அதோ என அதிமுகவிற்கு பிலிம் காட்டிவரும் நிலையில், நேற்று பிரதமர் மோடி சென்னையில் கலந்துகொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் தேமுதிகவும் பங்குபெறுவதாக பேசப்பட்டது. 

 

ஆனால் இறுதி கட்டத்தில் தேமுதிக அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்ட மேடையில் வைக்கப்பட்ட கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களில் விஜய்காந்தின் படம் வைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. 

 

su

 

நேற்று காலை பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய குழு தேமுதிக துணைச்செயலாளர் சுதீசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. 

 

அதேநேரத்தில் திமுகவுடன் கூட்டணி பேசுவதற்கு அக்கட்சியின் நிர்வாகிகளான அனகை முருகேசன், சேலம் இளங்கோவன் ஆகியோரை திமுக பொருளாளர் துரைமுருகனிடம் அனுப்பிவைத்திருந்தார் சுதீஷ். முன்னதாக துரைமுருகனிடம் சுதீஷும் தொலைபேசியில் பேசியிருக்கிறார். 

 

d

 

இதற்கிடையே பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடைக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டதால் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக அமைச்சர் தங்கமணி, வேலுமணி சுதீஷிடம் பிறகு பேசுகிறோம் என கூறிவிட்டு சென்றுவிட்டார்கள். 

 

s

 

இந்தநிலையில் திமுகவோடு தேமுதிக கூட்டணி பேசியது திமுகவின் பொருளாளரான துரைமுருகன் வெளிப்படையாக பத்திரிகையாளர்களை சந்தித்து, என்னிடம் தேமுதிக நிர்வாகிகள் நேரில் வந்து பேசினார்கள், அதற்கு முன் சுதீஷ் போனில் பேசினார். நான் அவர்களிடம் சொன்னது, எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. இனி இங்கு இடமில்லை என கூறி அவர்களை அனுப்பிவிட்டேன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருந்தார்.    

 

ஏற்கனவே கூட்டணி பேசிவருகிற அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்காக கூட்டணியில் கூடுதல் முக்கியத்துவத்தை கொடுப்பதற்காகவும் இப்படி ஒரு ஸ்டண்டை தேமுதிக நடத்தியுள்ளதை திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி மூலம் அம்பலமானது. 

 

மோடி பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டு சென்றபிறகு, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து சுதீஷ் தனியார் ஓட்டலில் பேசியிருக்கிறார். 

 

n

 

அப்போது அதிமுக நிர்வாகிகள் சுதீஷை பார்த்து காட்டமாக,  ''இந்த வேலையெல்லாம் வச்சிக்காதிங்க. தொகுதி எண்ணிக்கை முன்பின் இருக்கலாம், எந்தெந்த தொகுதி என்பதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் மத்த டீலிங் எல்லாம் உங்களின் எதிர்பார்ப்புப்படியே செய்தோம்.   மேலும் செய்யப்போகிறோம்.  இப்படி இருக்க திமுகவுடன் பேசுவது என்ன பிளாக் மெயிலா? இதை திமுக பொருளாளராக துரைமுருகனின் வெளியடையான பேச்சு உங்களை அம்பலப்படுத்திவிட்டது. சரி இப்பொழுது கூட்டணியை முடிவு செய்கிறோம். ஆனால் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியதை  எப்படி மறுக்கப்போகிறீர்கள். முதலில் அந்த வேலையை செய்யுங்கள்'' என அதிமுக நிர்வாகிகள் சுதீஷிடம் கூறியிருக்கிறார்களாம். 

 

o

 

இந்த பின்னணயில்தான் தேமுதிக சுதீஷ் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து திமுக பொருளாளர் துரைமுருகனை எங்கள் கட்சியின் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்தார்கள். துரைமுருகனிடம் நான் பேசவே இல்லை என விளக்கம் கொடுத்தார். ஆனாலும் இந்த விளக்கம் ''எங்க அப்பன் குதிருக்குள் இல்லை'' என தேமுதிகவிற்கு திருப்பியடித்துள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று நான் காரில் வரும்போது சுதீஷ் போனில் பேசினார். அக்கட்சியின் நிர்வாகிகள் என்னை நேரில் வந்து பார்த்தார்கள். நான் திமுகவில் இடமில்லை என திருப்பி அனுப்பினேன்.  அய்யோ பாவம் தேமுதிகவின் நிலை பரிதாபமாக உள்ளது என விளக்கமளித்திருந்தார்.

 

v

தேமுதிகவின் அரசியல் ஸ்டண்ட் இரட்டை முகமாக அதிமுக மற்றும் திமுகவில் அம்பலமாகியதோடு முதலில் கூட்டணிக்காக அதிமுகவை டீலிங் விஷயத்தில் மிரட்டிவந்த தேமுதிக இப்போது  அக்கட்சியாலேயே மிரட்டப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்