Skip to main content

7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!

Published on 23/08/2018 | Edited on 23/08/2018
su

 

 சென்னை, கடலூர், ஈரோடு,  மதுரை , ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

 

 சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை மாவட்ட ஆட்சியராக சண்முகசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.    

 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி   வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.    கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மகேஸ்வரி ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ராமதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   ராமதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கிருஷ்ணகிரி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  தொல்லியல் துறை ஆணையராக உதயசந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

  உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலாளராக சுனில் பாலிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணை ஆணையராக லதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்