திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுரை சின்ன சிங்கப்பூர் என்று அழைப்பது உண்டு, அங்கிருந்த முன்னோர்கள் தாராளமணம் கொண்டவர்களாகவும், நற்பணிகள் பலவும் செய்தவர்களாகவும் வாழ்ந்து ஊரை வளர்த்துள்ளனர். அப்படிப்பட்ட உதவிகளில் ஒன்று தான் தற்போது சஹர் உணவு .
திருவாரூரில் இருந்து மன்னார்குடி சாலையில் இருக்கிறது கூத்தாநல்லூர், அங்கு பெருபான்மையான மக்கள் இஸ்லாமியர்களே இருந்தாலும் சுற்று வட்டத்தில் இருக்கிற மற்ற மதத்தை சார்ந்தவர்களோடு இனக்கமாகவே பழகி வருகின்றனர். இஸ்லாமியர்களின் புனிதமாக கருதும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கடைப்பிடிக்க கூடிய ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து கடந்த ஆண்டு, 290 பேருக்கு உணவு தயாரித்து அவரவர் இல்லங்களுக்கே நேரில் சென்று சஹர் உணவு வழங்கி மகிழ்கிறது பொன்னாச்சி சேவை மையம். அதே போல் இந்த ஆண்டும், நன்கொடையாளர்களின் உதவியோடு 480 பேருக்கு உணவு தயார் செய்து வழங்கினர். திருவாரூர் மாவட்டத்திலேயே கூத்தாநல்லூரில் தான் இந்த நிகழ்வு இரண்டு வருடமாக நடந்து வருகிறது .
இது குறித்து பொன்னாச்சி சேவை மையத்தின் ஹாஜா நஜ்முதீன் கூறுகையில், "இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் இந்த பகுதியில், வறுமை நிலையிலும், தனிமையில் இருப்பவர்களும், ஆதரவற்ற நிலையிலும் இருப்பவர்களை கண்டறிந்து ரமலான் மாதம் 30 நாளும் 30 தண்ணர்வ தொண்டர்களின் உதவியோடு மாலை 4 மணி முதல், இரவு 2 மணி வரை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கி மகிழ்கிறோம்" என்கிறார்.
கூத்தாநல்லூர், மிகவும் பழமை வாய்ந்த இஸ்லாமிய கோட்பாடுகள் நிறைந்த ஊராகும்,.அதனால் தான் சின்னசிங்கப்பூர் என்பார்கள். அங்கு 12 ம் நூற்றாண்டிலேயே இஸ்லாமியர்கள் வாழ்ந்திருப்பாகற்கான பல சான்றுகளும் இருக்கின்றன. கி.பி 1560 இல் கட்டை மரைக்காயர் என்பவரின் முயற்சியால் பள்ளிவாசலை கட்டித் தந்தார் அது இன்று சாட்சியாக நிற்கிறது. மேலும் அந்த கிராமத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பல கொடைகளை செய்துள்ளனர். அரசு சார்பதிவாளர் அலுவலகம் கட்ட இடம், அரசு தபால் மையத்திற்கு இடம், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இடம், விளையாட்டு மைதானத்திற்கு இடம், மின்சார வாரியத்திற்கு இடம், மின்சாரதுனை மின்னிலையம் அமைக்க இடம், தீயணைப்பு துறைக்கு இடம், பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடம், அரசு மருத்துவமனைக்கு இடம் கூட்டுறவு வங்கிக்கு இடம், தொலைப்பேசி அலுவலகத்திற்கு இடம் என சொந்த இடங்களை கொடுத்து ஊரை பேராக்கினர்.
கலைஞரின் முயற்சியால் கூத்தாநல்லூர் நகராட்சியாக மாறி வளர்ச்சியடைந்துள்ளது. அங்கு காலத்திற்கு ஏற்ப உதவிகரம் நீட்டுபவர்கள் தொடர்வது நீங்காசத்திரமாக இருக்கிறது.