Skip to main content

கோவையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018

கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகையானது உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக கோவையிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள அனைத்து மசூதிகள் மற்றும் ஜமாத்துகளில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை உக்கடம் வின்செண்ட் சாலை பகுதியில் உள்ள நல்லாயன் பள்ளியில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
 

Ramanan festival celebration in Coimbatore


அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஓற்றுமையாக வாழவும் ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறவும் சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொழுகை நிகழ்ச்சிக்கு பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

இதே போன்று பூமார்கெட், போத்தனூர், மேட்டுபாளையம் சாலை என பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகளானது நடைபெற்றது. இந்த தொழுகை நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகை நிகழ்ச்சிக்கு பின்னர் இஸ்லாமியர்கள் சக இஸ்லாமியர்களுடமும் பிற மதத்தினருடனும் இனிப்புகளையும், பிரியாணியையும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்