தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாகும் 'வடசென்னை' படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. கிராமத்தை மையப்படுத்தி கேங்ஸ்டர் கலந்த சமூக படமாக உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிக்கிறார்கள். மேலும் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், டேனியல் அனி போப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ட்ரைலரை வரும் ஜூலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாள் அன்று வெளியிடுவதாக தனுஷ் சமீபத்தில் அறிவித்தார். மேலும் படத்தை வரும் செப்டம்பரில் வெளியிடுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன், சமந்தா, நடிப்பில் உருவாகும் ‘சீமராஜா’ படம் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதால் சிவகார்த்திகேயன், தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published on 16/06/2018 | Edited on 16/06/2018