Skip to main content

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவ படம்; ஆஃபர் வழங்கிய யோகி ஆதித்யநாத்

Published on 22/11/2024 | Edited on 22/11/2024
Yogi Adityanath declares The Sabarmati Report tax-free in UP

12த் ஃபெயில் படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த விக்ராந்த் மாஸ்ஸி புதிதாக நடித்துள்ள திரைப்படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. தீரஜ் சர்ணா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸியோடு ராஷி கண்ணாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். கடந்த 15ஆம் தேதி வெளியான இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு அரசியல் உள்நோக்கத்தோடு இந்தப் படத்தை எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அதே சமயம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது குஜராத் முதல்வராக இருந்து தற்போது பிரதமராக இருக்கும் மோடி, இத்திரைப்படத்தை பாராட்டினார். மேலும் “உண்மையை வெளி கொண்டு வந்துள்ள சிறந்த படம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இந்தப் படத்திற்கு மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது உத்தர பிரதேசத்திலும் இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படக்குழுவை பாராட்டி வரி விலக்கு அளித்து உத்தரவிட்டார். இதற்கு முன்னதாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் தி கேரள ஸ்டோரி உள்ளிட்ட சில படங்களுக்கு உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்