Skip to main content

திமுகவிடம் லைசென்ஸ் இருக்கு...வர வேண்டியது வரும்...அதிர வைத்த எடப்பாடி!

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

தமிழக முதல்வர் எடப்பாடி தன் வசம் வைத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் விடப்படும் டெண்டர்கள் அனைத்திலும் 13 சதவீதம் கமிஷன் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் துறையைச் சேர்ந்தவர்கள். தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் அதிக டெண்டர் எடுப்பதாக முதல்வர் எடப்பாடியிடம் அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள் குற்றச்சாட்டு வைக்க, அதற்கு முதல்வரே, "தமிழக முழுவதும் தி.மு.க. பிரமுகர்கள் தொழில்முறை லைசென்ஸ் வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் எடுப்பதில் தவறு எதுவும் கிடையாது. உங்களுக்கு தேவையான கமிஷனை வாங்கிக்கொள்ளுங்கள்'' என அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டாராம். 

 

dmk



ஆளும்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு கமிஷன் கொடுத்தால் போதும் என்று சொன்ன முதல்வரின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்போது முதல்வருக்கே தெரியாமல் 3 சதவீதம் கூடுதலாக கேட்டு டெண்டர் போடுவதற்கு முன்னமே திருச்சி ஒப்பந்தக்காரர்களிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறார்கள். வருகிற அக்டோபர் 1-ம் தேதி CRIDP என்கிற பெயரில் ஒட்டுமொத்தமாக 120 கோடி ரூபாய்க்கான டெண்டர் அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அக்டோபர் 4-ம் தேதி டெண்டர் திறக்கிறார்கள். இதற்கு முன்கூட்டியே 13 சதவீதம் கமிஷன் தொகையாக 15.60 கோடி வாங்குவார்கள். ஆனால் இந்த முறை 3% அதிகப்படுத்தி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்களை டார்ச்சர் செய்கிறார்கள் என்கிற சத்தம் அதிகமாக இருக்கிறதாம். லால்குடி, முசிறி, துறையூர், திருச்சி, மணப்பாறை என ஒவ்வொரு ஏரியா அதிகாரியும் தன்னுடைய ஏரியாவில் உள்ள ஒப்பந்தக்காரர்களிடம் கூடுதல் தொகை கேட்பதுதான் தற்போது பெரிய பேச்சாக இருக்கிறது. 


என்ன நடக்கிறது? கமிஷன் தொகை உயர்வுக்கு யார் காரணம் என்று விசாரிக்கையில்... 

"திருச்சியை பொறுத்தவரையில் ஒப்பந்தக்காரர்கள் சார்பாக கண்ணையன் என்பவர் கடந்த சில வருடங்களாக கமிஷன் தொகையை வசூல் செய்து மொத்தமாக கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரை கடந்த வருடம் ஒதுக்கிவிட்டு திருக்குமரன் என்பவர் வசூல் செய்து கொடுத்து வந்தார். அவர் அந்த 13 சதவீதத்தில் பாதியை மட்டும் நெடுஞ்சாலைத்துறையிடம் கொடுத்து விட்டு மீதியை முதல்வரிடம் கொடுத்துவிட்டேன் என்று ஏமாற்றியதால் இந்த முறை உஷாரான நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி கூடுதலாக 3 சதவீதம் கேட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்'' என்கிறார்கள்.